Friday, February 1, 2013

சரிந்து போகும் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் அரசியல் செல்வாக்கை தக்க வைக்கவே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்ட மக்களுக்கு பொய் வாக்குறுதி!

Friday, February 01, 2013
இலங்கை::வவுனியா மாவட்டத்தில் வாழும் தமிழ் சகோதரர்கள் எவருக்கும் எவ்வித அநியாயமும் இழைக்கப்படவில்லை.இன்று வவுனியாவில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்ட மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கியதாக தமிழ் மக்கள் எம்மிடம் கூறியதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ளார்..

இந்திய வீடமைப்பு திட்டத்தில் வவுனியா தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டும். தமிழ் பெயர்கள் கொண்ட கிராமங்கள் உள்வாங்கப்படவில்லையென்று கூறி தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் வழமையான வன்னி மாவட்ட அரசியல்வாதிகள் பேரணியினை நடத்தியது குறித்தும்,அவர்களால் புணையப்பட்ட அறிக்கையொன்றை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர அவர்களிடம் வழங்கியமை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் தெளிவுபடுத்தியுள்ளார்.அதே வேளை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு தெளிவான அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் இந்த வீடமைப்பு திட்டத்தில் எந்த இனத்தவர்களுக்கும் அநீதி இழைக்கபடவில்லையென்றும்,பயனாளிகள் தெரிவு மிகவும் நேர்மையாக இடம் பெற்றுள்ளதை அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.குறிப்பாக கடந்த 3 தசாப்த காலமாக வவுனியா மாவட்டத்தில் வாழ்ந்த மக்கள் பயங்கரவாதத்தினால் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியினால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் ஏற்பட்டது.

இவ்வாறானதொரு அமைதிச் சூழலில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும்.அபிவிருத்தி திட்டங்கள் வவுனியா மாவட்டத்தில் வாழும் சகல மக்களுக்கும் சமமாகவே பகிர்ந்தளிக்கப்பட்டுவருகின்றது.1994 ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டு வந்துள்ளது. வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் 2610 வீடுகளும் (அதில் 360 முஸ்லிம்களுக்கும்.2250 தமிழ் மக்களுக்கும்),வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 2100 வீடுகளும்(அனைத்தும் தமிழ் மக்களுக்கு),வவுனியா தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் 2500 வீடுகளும்(அனைத்தும் தமிழ் மக்களுக்கு).வவுனியா சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் 214 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளை பயங்கரவாதிகளினால் வவுனியா மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர்.இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்திகள் மற்றும் ஏனைய நலனோம்பும் திட்டங்கள் அவர்களை சென்றடையவில்லை.இந்த நிலையில் தற்போது அவர்கள் தமது பிரதேசங்களில் மீள் குடியேறிவருகின்ற போது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கும்,வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு உண்டு.அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற பதவிகளுக்கு அப்பால் தமிழ் பேசும் ஒரே சமூகம் என்ற வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினால் ஆற்றப்படும் பணிகளை இன்று தமிழ் மக்கள் பாராட்டியுள்ளனர்.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தில் முதலாவது கட்டத்தில் 11 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.அதில் 2 முஸ்லிம் கிராமங்களும்,4 சிங்கள கிராமங்களும்,5 தமிழ் கிராமங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.அதே வேளை 2 ஆம் கட்ட வீடமைப்பு திட்டத்தில் 1 முஸ்லிம் கிராமமும்,4 சிங்கள கிராமமும்,6 தமிழ் கிராமமும்.தெரிவு செய்யப்பட்டுள்ளது.அந்த பயனாளிகளின் தெரிவுகளை செய்தவர்கள் அரச அதிகாரிகள்.இதில் எவ்வித முறைகேடுகளும் இடம் பெறுவதற்கு சாத்தியமில்லை என்பது தெளிவான உண்மை.இருந்த போதும் சரிந்து போகும் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் அரசியல் செல்வாக்கை தக்க வைத்தக் கொள்ள,அப்பாவி தமிழ் சகோதரர்களை ஏமாற்றி,இனவாத சிந்தனைகளை அவர்களுக்கு புகுத்தி,அச்சுறுத்தி பஸ்களில் ஏற்றிவந்துள்ளனர்.

தங்களுக்கு உதவிகளை பெற்றுத் தருவதாக கூறியே எம்மை அழைத்து வந்ததாகவும்,பின்னர் பதாதைகளை தங்களிடம் தந்த போது.அது இனவாதத்தை மீண்டும் வவுனியாவில் தோற்றுவிக்கும் நடவடிக்கையாகவே இருந்ததை கண்டதால் தாங்கள் அதிலிருந்து விலகி கொண்டதாக ஆர்ப்பாட்டத்துக்கு வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் புலிகளினால் வெளியயேற்றப்பட்ட முஸ்லிம்கள் 22 வருடங்களின் பின்னர் தமது சொந்த தாயகத்துக்கு வருகை தருகின்ற போது,புலிகளுடன் சேர்ந்து நாங்களும் முஸ்லிம்களை துரத்தினோம்,அவர்களது அனைத்து உடமைகளையும் சூரையாடினோமே,அதற்கு பிரயச்சித்தமாக இம்மக்மக்களை அவர்களது மண்ணில் வாழவிடுவோமே என்று சிந்திக்க தெரியாத சுயநல அரசியல் வாதிகள்.தொடர்ந்தும் வன்னி மாவட்டத்தில் தமிழ் மக்களையும்.முஸ்லிம்களையும் மோதவிடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனது ஒரு அசிங்கத்தை தான் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர்.ஒரு சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஆள நினைக்கும் மற்றுமொரு சிறுபான்மை இனத்தின் செயற்பாடுகள் எந்த விதத்தில் நியாயமாகும்.துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது பிரதேசங்களுக்கு வருகின்ற போது அவர்களுக்கு எதிராக அபாண்டத்தை சுமத்துவதும்,அவர்கள் சார்ந்திருக்கும்,அரசியல் தலைமைகளை விமர்சிப்பதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை என்பதை இந்த நாட்டில்வாழும் சகல மக்களும் அறிவார்கள்.

வன்னி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் எந்த அபிவிருத்தி திட்டத்திலோ அல்லது நியமனங்களிலோ தமிழ் சகோதரர்களுக்கு தேவையான சம உரிமை வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.சுய நல அரசியல்வாதிகளின் சதி வலைகளில் தமிழ் மக்களை சிக்கச் செய்து,சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கும்,அந்த வன்னி அரசியல் வாதிகளின் இருப்புக்களுக்குமான உதவிகளை பெரும் .இவ்வாறான ஏமாற்று போராட்டங்களில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை வேண்டிக் கொள்கின்றேன்,உரிமை போராட்டம் என்று கூறி அப்பாவி தமிழ் இளைஞர்களை பலியெடுக்க செய்தவர்களை நம்பி தொடர்ந்தும் எமது செல்ல வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment