Friday, February 1, 2013

திருப்பதிக்கு வரும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக திருப்பதியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த (புலிஆதரவு மனநோயாளி) வைகோ முடிவு!

Friday, February 01, 2013
சென்னை::திருப்பதிக்கு வரும் ராஜபக்சேவுக்கு எதிராக திருப்பதியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் (புலிஆதரவு மனநோயாளி) வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் தன்மான உணர்ச்சிக்குச் சவால் விடும் வகையில், இந்துக்கள் வழிபடும் திருத்தலமான திருப்பதிக்கு மகிந்த ராஜபக்சேவை அழைத்து வந்து வரவேற்கும் அக்கிரமத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது.

இலங்கையில், 1607 இந்துக் கோவில்களை உடைத்ததாக, சிங்கள அரசு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆனால், 2100க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள், சிறுசிறு ஆலயங்கள், குலதெய்வங்களை கடந்த பல ஆண்டுகளில் சிங்களவர்கள் உடைத்து நொறுக்கிப் பேயாட்டம் ஆடினார்கள்.

திரிகோணமலை சிவன் கோவில் தேரைச் செய்த தச்சர்களை, நடுத்தெருவில் மணிக்கட்டை வெட்டிக் கொன்றார்கள். இந்துக் கோவில் பூசாரிகளைக் கொன்றார்கள். இதையெல்லாம் இந்திய நாடாளுமன்றத்திலேயே பேசி நான் பதிவு செய்து இருக்கின்றேன்.

ஏன், இந்துக்கள் பெரிதாகப் போற்றுகின்ற விவேகானந்தர், சிகாகோ உலக சமயங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்பும்போது, புத்த பிட்சுகள், சிங்களர்கள், அனுராதபுரத்தில் செருப்பாலும், கல்லாலும் விவேகானந்தரை அடித்து விரட்டினார்கள்.

சிவன் கோவில், முருகன் கோவில், துர்கையின் கோவில்களை எல்லாம் உடைத்து நொறுக்கிய, சிங்கள இனவெறிக் கூட்டத்தின் அதிபர் ராஜபட்ச அரசுதான், இப்போதும் தமிழர்கள் வழிபட்டு வருகின்ற கோவில் வளாகங்களில் சிங்கள ராணுவத்தை நிறுத்தி இருக்கின்றது. அங்கே பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றது. இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்குபவன், திருப்பதி கோவிலுக்கு உள்ளே நுழைவதை அனுமதிக்கலாமா?

‘ராஜபடச பீகாருக்கும் சென்றார்; ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் சென்று வழிபட்டார்’ என்று உலகத்துக்குச் சொல்லுவதற்காக, திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு, இந்தத் துரோகத்திலும் அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எனவே, ஏற்கெனவே அறிவித்தபடி, இந்தியாவுக்கு ராஜபட்சவை அழைத்து வருகின்ற, காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசைக் கண்டித்து, தில்லியில் பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டம், திட்டமிட்டபடி பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும்.

திருப்பதியிலும் ராஜபட்ச வருகையை எதிர்த்து, மதிமுக சார்பில், பிப்ரவரி 8 ஆம் தேதி, கருப்புக்கொடி அறப் போராட்டம் நடைபெறும்.

மானம் அழிந்து விடவில்லை தமிழ்க்குலத்துக்கு என்பதை உணர்த்தும் விதத்தில் இந்த கருப்புக்கொடி கண்டன அறப்போர் நடைபெறும்.

இவ்வாறு  (புலிஆதரவு மனநோயாளி) வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment