Saturday, February 9, 2013

ஊர்காவல் துறையில் கடற்படையினர் வசமிருந்த வாடகை வீடுகள் கையளிப்பு!

Saturday, February 09, 2013
இலங்கை::காஞ்சதேவ கடற்படை முகாமானது மான்கும்பனுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையினர் வசமிருந்த, பொதுமக்களின் சொத்துக்களும் கடற்படையினர் வாடகைக்கு இருந்த வீடுகளும், ஊர்காவல் துறையில் அன்மையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்திகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கடற்படைத் தளமானது கடற் பிரதேசத்துக்கு அன்மையில் அமையப் பெற்றுள்ளதுடன், பொது மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் நோக்கில் வேலனைப் பிரதேசத்திலிருந்த கடற்படை முகாமானது இங்கு நகர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கடற்படை உயரதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment