Friday, February 08, 2013
இலங்கை::சென்னையிலுள்ள இலங்கை வங்கிக் கிளை மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் வசித்துவருகின்ற இலங்கையர்களுக்கும் இலங்கை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு புதுடில்லியிடம், இலங்கை அரசாங்கம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
'இந்தியாவில் வசித்துவருகின்ற இலங்கையர்களுக்கும் மற்றும் மஹாபோதி சமூகம், இலங்கை ஏயார்லைன்ஸ் போன்ற இலங்கை நிறுவனங்களுக்கும் இந்திய அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கேட்க வேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது' என இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னையிலுள்ள இலங்கை வங்கிக்கிளைக்குள் கத்திகள், பொல்லுகள், இரும்புக்கம்பிகள் சகிதம் 15 பேரைக் கொண்ட குழுவொன்று நேற்று வியாழக்கிழமை நுழைந்தது.
இவ்வாறு நுழைந்த இக்குழுவினர் 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் பாதுகாப்புக் காவலாளியையும் தங்களது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொண்டு இலங்கை வங்கிக்கிளை அலுவலக பாதுகாப்பு அறையினுடைய யன்னல்களையும் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திர நிலையத்தின் கண்ணாடிக் கதவுகளையும் உடைத்து நொறுக்கினர். இதன்போது இவ்வங்கியின் 2 ஊழியர்கள் காயமடைந்தனர். பயிலுநரொருவருக்கும் காயமேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இரு வங்கி ஊழியர்களும் சென்னையிலுள்ள கில்போக் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment