Friday, February 8, 2013

இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலம் புத்த கயா வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் மாநில மந்திரிகள், அதிகாரிகள் வரவேற்றனர்.!

Friday, February 08, 2013
பாட்னா::இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலம் புத்த கயா வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் மாநில மந்திரிகள், அதிகாரிகள் வரவேற்றனர்.

மாநில போலீசின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. ராஜபக்சேவுடன் மனைவி ஷிராந்தி ராஜபக்சே மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் வந்துள்ளது. வரவேற்பு முடிந்ததும் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோவிலில் ராஜபக்சே சாமி கும்பிடுகிறார்.

மதியம் அவருக்கு நிதிஷ்குமார் விருந்து அளிக்கிறார்.

தலைநகர் டெல்லி செல்வதை ராஜபக்சே தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக நேரடியாக ஒடிசா மாநிலத்தின் கட்டக்கிற்கு சென்று அங்கிருந்து தனியார் பிரத்யேக விமானத்தில் பிகாரில் உள்ள புத்த கயா சென்றார். அங்குள்ள பிரசித்தி பெற்ற ‘மகா போதி' புத்தர் ஆலயத்தில் அவர் வழிபாடு நடத்தினார். அவருடன் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சென்று வழிபட்டார்.

இன்று மாலை திருப்பதி செல்லும் ராஜபக்சே, அங்கிருந்து சாலை வழியாக திருமலைக்கு செல்கிறார். இரவு மலையிலேயே தங்குயிருக்கும் அவர் நாளை அதிகாலையில் திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்கிறார். பின்னர் காலை ஒன்பது மணிக்கு சிறப்பு விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு செல்கிறார்.

No comments:

Post a Comment