Sunday, February 10, 2013

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்து வெளியாகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடை இலங்கையில் நீக்கம்!

Sunday, February 10, 2013
இலங்கை::உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்து வெளியாகியுள்ள விஸ்வரூபம் திரைப்படம் விரைவில் இலங்கையில் திரையிடப்பட உள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம் மக்களையும் இஸ்லாமிய மதத்தையும் இழிவுபடுத்தும் காட்சிகள் இந்தப் படத்தில் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை திரையிடுவதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

சில காட்சிகளை நீக்கியதன் பின்னர் விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது.

தற்போது இரண்டு காட்சிகளை நீக்கி, இலங்கையில் குறித்த திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னரே அதற்கான அனுமதியை தணிக்கை சபை இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment