இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளா நவனீதம் பிள்ளையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், நவனீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையானது ஒரு தலைப்பட்சமானதும், பக்கச்சார்பானதுமாகும் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச அறிக்கை அரசாங்கத்திற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அறிக்கை பக்கச்சார்பான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment