Sunday, February 10, 2013

ஜோர்தானில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி நாடு திரும்பிய 47 பெண்கள்!

Sunday, February 10, 2013
இலங்கை::ஜோர்தானில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான 47 பெண்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகத்தின் தடுப்பு முகாமில் தங்கியிருந்தவர்களே இன்று நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இவர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டு வழங்கப்பட்டு நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேவையான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கன் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

நாடு திரும்பிய அனைத்து பெண்களுக்கும் போக்குவரத்து செலவு மற்றும் வீடுகளுக்கு அண்மித்த பகுதியிலுள்ள பஸ் நிலையம் வரை போக்குவரத்து வசதி என்பன வழங்கப்பட்டதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment