Sunday, February 10, 2013

புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் புரிந்துணர்வின் அடிப்படையில் பொது எதிரிக்கு எதிரான இராஜதந்திர போரில் இணைந்து செயற்பட வேண்டும் - (புலி) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா!

Sunday, February 10, 2013
சூரிச்::தாயகத்தில் இருக்கும் எமக்கு பெரும் கவலை அளிக்கிறது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசுக்கு எதிராக இப்போது இராஜதந்திர போரே நடைபெறுகிறது. இந்த வேளையில் தான் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு (புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்ற) புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் ஒன்றுமையாக செயற்பட வேண்டும்: (புலி)கூட்டமைப்பின்  மாவை சேனாதிராசா  புலிகளுக்கு ஆதரவாக தூண்டுதல்! 

(புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு இயங்கும்) தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் புரிந்துணர்வின் அடிப்படையில் பொது எதிரிக்கு எதிரான இராஜதந்திர போரில் இணைந்து செயற்பட வேண்டும், தாயகத்தில் எவ்வாறு பல தமிழ் கட்சிகள் தமிழ் கூட்டமைப்பாக செயற்படுகின்றனவோ அது போல புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

சுவிஸில் உள்ள சிவராம் ஞாபகார்த்த மன்றம் ஏற்பாடு செய்த நினைவுக்கருத்தரங்கில் இனப்பிரச்சினையும் சமகால அரசியலும் என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் சுதந்திரமும் விடுதலையும் ஏற்பட வேண்டும் என போராடுகிறோமோ அந்த நிலம் தொடர்ச்சியாக சிங்களமயமாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இராணுவ மயமாக்கப்படுகிறது.

இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக தாயகத்தில் நாம் ஜனநாயக ரீதியில் இராஜதந்திர ரீதியில் போராடி வரும் அதேவேளை அதற்கு பக்கபலமாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்களும் அமைப்புக்களும் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்

தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கு 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரே அணியில் நின்று ஒன்றுமையாக செயற்பட்ட புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர் அமைப்புக்கள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் பல பிரிவுகளாக பிளவு பட்டு காணப்படுகின்றன. பொது எதிரிக்கு எதிராக போராடுவதை விட்டு தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன.

இது தாயகத்தில் இருக்கும் எமக்கு பெரும் கவலை அளிக்கிறது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசுக்கு எதிராக இப்போது இராஜதந்திர போரே நடைபெறுகிறது. இந்த வேளையில் தான் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள (புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்ற) தமிழர் அமைப்புக்கள் ஒன்றுமையாக செயற்பட வேண்டும்.

இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் தாயகத்தில் போராட்டங்களை நடத்தும் சமகாலத்தில் அதற்கு ஆதரவாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புலம்பெயர் (புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்ற) தமிழர்கள் போராட்டங்களை நடத்த வேண்டும்.

அப்போதுதான் அதன் தாக்கம் அதிகரிக்கும். தாயகத்தில் அடக்குமுறைக்குள் இருக்கும் மக்களுக்கும் புது தென்பும் நம்பிக்கையும் ஏற்படும். எங்களுக்காக (புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்ற) புலம்பெயர்ந்த எமது உறவுகள் போராடுகிறார்கள் என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள்

இப்பொழுது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக தமிழர்களுக்கு அனுசரணையாக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தென் ஆபிரிக்க நாடுகள் அணிவகுத்துவருவதை நாம் அவதானிக்கலாம்

அதற்கும் மேலாக தமிழ்த் தேசிய இனத்தை ஒடுக்கி அழித்துவரும் அரசை எதிர்த்தும், அந்த அடக்குமுறைச் சர்வாதிகாரத்தை வீழ்த்தி எம் தமிழர் நிலத்தில் தமிழர் ஆட்சியை ஏற்படுத்தவும் ஜனநாயக வழியில், சாத்வீக அடிப்படையில் களத்திலும், சர்வதேசத்திலும் போராட்டங்களை முன்னெடுக்கவும் நாம் திட்டங்களை வகுக்கவும் கடப்பாடும் திடசங்கற்பமும் கொண்டு செயலாற்றவும் நாம் ஒன்றுபட வேண்டும்.

இன்று ஏற்பட்டுவரும் உலக சந்தர்ப்பத்தை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும். இன்று கூடி வந்திருக்கும் இராஜதந்திரப் போரில் நாம் மிகுந்த இராஜதந்திரத்துடனும், பொறுமையுடனும், உயர்ந்த தன்னலமற்ற அர்ப்பணத்துடனும் ஒரே குரலாய் ஒன்றுபட்டுச் செயற்படுவோமாயின் இலங்கையில் தமிழ்நிலத்தில் தமிழர் ஆட்சியை நிலைநாட்டுவோம் என அவர் தெரிவித்தார்.

கருத்தரங்கில் நன்றி உரையாற்றிய சுவிஸ் சிவராம் ஞாபகார்த்த மன்றத்தின் ஏற்பாட்டாளர் சண். தவராசா நெருக்கடியான இக்கால கட்டத்தில் சிவராம் போன்ற பல்துறை ஆளுமை பெற்றவர்களுக்கான வெற்றிடம் நிரப்பபடாமலே உள்ளது. சிவராம் மட்டக்களப்பு சமூகத்திலும் சரி ஒட்டுமொத்த ஈழத்தமிழர் சமூகத்திலும் சரி ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. சிவராமின் எழுத்துக்கள் காலத்தை வென்று வாழ்பவை. இன்றும் சமகால அரசியலுக்கு பொருந்தி செல்பவை. கருணா புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற போது மட்டக்களப்பு மக்கள் மத்தியில் சகல மட்டங்களிலும் ஒரு குழப்பம் காணப்பட்டது. பிரிந்து சென்றதை நியாப்படுத்தியவர்களும் உண்டு. குழம்பி போய் இருந்தவர்களும் உண்டு. இவர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது சிவராம் எழுதிய கருணாவுக்கு ஒரு கடிதம் என்ற பகிரங்க கடிதமாகும். அது மட்டக்களப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்

No comments:

Post a Comment