Sunday, February 10, 2013

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் சில இலங்கையர்கள் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் - ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க!

Sunday, February 10, 2013
இலங்கை::வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் சில இலங்கையர்கள் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்யும் வகையில் புலம்பெயர்ந்து வாழ்வோர் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாடுகளில் வாழும் சில இலங்கையர்கள் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மெய்யான விடயங்களை மறைத்து போலிப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு முரண்பாடுகள் சர்வதேச அரங்கில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையக் கூடாது எனவும், உள் முரண்பாடுகள் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்கைகள் அன்றாட வீட்டு நிகழ்வுகளில் நாம் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.சில விடயங்களில் வீட்டு;க்குள் முரண்பாடுகள் காணப்பட்டாலும் அதனை அம்பலப்படுத்தி குடும்பத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த நாம் முனைப்புக் காட்டுவதில்லை என ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment