Sunday, February 10, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை - இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய!

Sunday, February 10, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த பெரும் எண்ணிக்கையிலானவர்களை காணவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ பலவந்தமாக எவரையும் கைது செய்யவில்லை எனவும், பொதுமக்களுக்கு எதிராக செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இராணுவத்தினர் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், அது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment