Sunday, February 10, 2013
சென்னை::இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை, இந்தியாவின் உளவு அமைப்பான 'ரோ" வின் தலைவர், ஆலோக் ஜோசி சந்தித்துள்ளார்.
இந்திய விருந்தினர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 30 நிமிடங்கள் வரையில் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதன்போது பேசிக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் எவையும் வெளியாகவில்லை.
இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த ஜனாதிபதி, இந்தியாவின் எந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்திருக்காத நிலையிலேயே, 'ரோ" உளவு அமைப்பின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.


No comments:
Post a Comment