Tuesday, February 12, 2013
சென்னை::இலங்கை வங்கி மீது நடந்த தாக்குதல் எதிரொலியாக இலங்கை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம், எழும்பூரில் உள்ள புத்த துறவிகள் தங்கும் விடுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அனைவரும் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அடையாள அட்டை உள்ள ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

No comments:
Post a Comment