Tuesday, February 12, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் சட்டத்திட்டங்களுக்கு அமைய இடம்பெறும் அரச தலைவர்களது மாநாட்டுக்கு தாம் ஆதரவு அளிப்பதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள பொது நலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மாவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அரசாங்கம் பொது நலவய நாடுகளின் மாநாடு என்ற பெயரில் வீண் விரையம் செய்து மக்களை இன்னல்களில் தள்ளுவதை தாம் வன்மையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பொது நலவாய நாடுகளின் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் வளர்ச்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆற்றிய பங்களிப்புக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக கமலேஷ் சர்மா இதன் போது குறிப்பிட்டார்.
எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தின் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், கட்சின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment