Tuesday, February 12, 2013

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல "தடா'!

Tuesday, February 12, 2013
மண்டபம்::கச்சத்தீவு திருவிழாவையொட்டி, பாதுகாப்பு கருதி கூடுதலாக சென்னையில் இருந்து கப்பல் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய கடலோர காவல்படை நிலைய கமாண்டர் மோரே தெரிவித்தார்.

மேலும், இதையொட்டி இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்திய கடலோர காவல்படையின் 36 வது ஆண்டுவிழாவையொட்டி, மண்டபம் நிலையம் இந்திய கடலோர காவல்படை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று, "ஹோவர் கிராப்ட்' கப்பலில் மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த இருவர்கள் பாம்பன் குந்துகால் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள சவுக்கு காடுப்பகுதியில் தீவிரவாதிகளைப்போல், அவர்களை நடிக்க வைத்தனர். மேலும், தப்பிக்க முயன்ற அவர்களை, துப்பாக்கி முனையில் பிடித்து வருவதுபோலும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

மண்டபம், இந்திய கடலோர காவல்படை நிலைய கமாண்டர் கூறியதாவது: கடலோர காவல்படை தினத்தையொட்டி பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். நாங்கள் கடல்வழி கண்காணிப்பில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளோம். கச்சத்தீவு திரு விழாவை முன்னிட்டு, கடல் வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். இங்கிருந்து கச்சத்தீவுக்கு சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்று வருவர். எங்களிடம் நான்கு சிறிய ரோந்து படகு, ஒரு கப்பல், இரண்டு "ஹோவர்கிராப்ட்' உள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்பு, மருத்துவ வசதி செய்ய உள்ளோம்.கச்சத்தீவு செல்பவர்களை கண்காணிக்கும் வகையில் சென்னையிலியிருந்து கூடுதலாக கப்பல் வர உள்ளது. கச்சத்தீவு திருவிழாவையொட்டி, பிப்., 22, 23ம் தேதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment