Tuesday, February 12, 2013

புலி ஆதரவாளர்களின் பிழையான வழிகாட்டல்களினால் மேற்குலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர் - கோதபாய ராஜபக்ஷ!

Tuesday, February 12, 2013
இலங்கை::மேற்குலக நாடுகள் இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேண வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.புலி ஆதரவாளர்களின் பிழையான வழிகாட்டல்களினால் மேற்குலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சொந்த நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் தரப்பினரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது, மேற்குலக நாடுகள் இலங்கையுடன் நல்லுறவைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு விளங்கிக்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச உறவுகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெற்ற விசேட செயலமர்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உள்ளகப் பிரச்சினைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு காண முனைப்பு காட்டுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடுகளில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரும், ஜனநாயக அரசியல் கட்சிகளின் பின்னணியில் இருந்து கொண்டு பயங்கரவாதிகள் தங்களது கொள்கைகளை பிரச்சாரம் செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மீண்டும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் முயற்சிகளில் ஈடுபடக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் கண்காணிக்கப்படும் எனம் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment