Tuesday, February 12, 2013

சட்டவிரோதமாக அவுஸ்ரேலிய மற்றும் கனடா செல்ல முற்பட்ட மேலும் 8 கைது!

Tuesday, February 12, 2013
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்ரேலிய மற்றும் கனடா செல்ல முற்பட்ட மேலும் 8 கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் - வெல்லமோயடக பிரதேசத்தில் வைத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இவர்கள் யாழ்ப்பாணம், பொலன்னறுவை, கரவெட்டி, கதிரவெளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் 19 வயதிற்கும் 42 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.

இவர்கள் இன்றைய தினம் சிலாபம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment