Tuesday, February 12, 2013
இலங்கை::பத்திரிகை விநியோகஸ்தர்களை இராணுவம் தாக்கவில்லை. ஊடகங்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களுக்காக நாம் மனம் வருந்துகின்றோம். இந்த நாட்டில் எல்லா இனமக்களும் பேதங்களற்ற நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
சில அரசியல்வாதிகள் பயங்கரவாதத்தை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இராணுவம் மக்களுக்கு உதவி செய்கின்றது என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment