Tuesday, February 26, 2013

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்?

Tuesday, February 26, 2013
ராமேசுவரம்::நேற்று ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் 2 படகுகளை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு குட்டி படகுகளில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து எச்சரிக்கை செய்தனர். இங்கு ஏன் மீன் பிடிக்க வந்தீர்கள்? எத்தனை முறை சொல்வது? என கூறி படகுகளில் இருந்த என்ஜினில் சீனியை தூவினர்.

பின்னர் அவர்கள் படகில் இருந்த மீனவர்களை சரமாரியாக தாக்கினர். மீனவர்கள் படகில் இருந்த வலைகளையும், பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் அள்ளி வீசிவிட்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அங்கிருந்து படகுகளில் கரை திரும்பினர். இலங்கை கடற்படை மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து காப்பாற்ற வேண்டும் என்று மீனவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment