Tuesday, February 26, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க இலங்கை அரசாங்கம் தயார்!

Tuesday, February 26, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயார் நிலைகளை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில், பேரவை அமர்வுக்கு சென்றுள்ள இலங்கையின் ராஜதந்திரிகளுக்கு சட்டரீதியாக உதவுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஜெனீவா சென்றுள்ளனர்.

இவர்கள் திருகோணமலையில் 5 மாணவர்களின் கொலை செய்யப்பட்டமை மற்றும் மூதூரில் 17 தொண்டு பணியார்கள் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

ஏற்கனவே கடந்த மனித உரிமை பேரவை அமர்வின் போது குறித்த கொலை சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ராஜதந்திரிகளால் விளக்கமளிக்கப்படும் என்று அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment