Monday, February 4, 2013

ஐக்கிய நாடுகள் அமைப்பு, பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்றனவே இனவாதத்தை தூண்டுகின்றன – தம்பர அமில தேரர்!

Monday, February 04, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பு, பொதுநலவாய நர்டுகள் அமைப்பு போன்றனவே இனவாதத்தை தூண்டுவதாக ஜே.வி.பி. ஆதரவு காலணித்துவத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் இணை அழைப்பாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை மீள இணைத்து அதிகாரப் பகிர்வினை வழங்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். திடீரென முஸ்லிம் எதிர்ப்பு இயக்கங்கள் தலைதூக்கியுள்ளதாகவும் இதன் பின்னணியில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பதற்கு முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லிம் கூட்டுறவின் மூலம் சர்வஜன வாக்கெடுப்பில் சாதக பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற காரணத்தினால் இவ்வாறு சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம்கள் பிரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தமிழ் மக்கள் தலா 33 வீதம் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment