Monday, February 11, 2013

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஸ் ஷர்மா இலங்கை வந்துள்ளார்!

Monday, February 11, 2013
இலங்கை::இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஸ் ஷர்மா இலங்கை வந்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்ளும் மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதன் பொருட்டே அவர் இலங்கை வருவதாக, வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது பொதுச் செயலாளர் கமலேஸ் ஷர்மா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது அதிகார பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment