Monday, February 11, 2013

ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கைக்கெதிராக, அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி!

Monday, February 11, 2013
சென்னை::ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கைக்கெதிராக, அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவ்விவகாரத்தில், சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு இலங்கை ஆளான நிலையில், கடந்தாண்டு ஐ.நா. சபையில் நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்தது. விரைவில், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் துவங்கவுள்ள நிலையில், அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், சர்வதேச நாடுகள் தலையிட உரிமை இல்லை என்று அதிபர் ராஜபக்சே காட்டமாக கூறியிருந்தது நினைவிருக்கலாம், இந்நிலையில், அமெரிக்கா ஐ.நா.சபையில், இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினால், அதை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment