Monday, February 11, 2013

இலங்கை சிறையில் வாடும், 27 தமிழர்களை, தமிழகம் கொண்டு வர, அவர்களின் முகவரியை, மத்திய அரசுக்கு அனுப்பாமல், தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது!

Monday, February 11, 2013
கோழிக்கோடு::இலங்கை சிறையில் வாடும், 27 தமிழர்களை, தமிழகம் கொண்டு வர, அவர்களின் முகவரியை, மத்திய அரசுக்கு அனுப்பாமல், தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது.

இலங்கை, கொழும்பு சிறையில், தமிழகத்தை சேர்ந்த, 27 பேரும், கேரளாவை சேர்ந்த ஆறு பேரும், என, 33 பேர் உள்ளனர். இவர்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அவர்களில், சுந்தரம் என்பவர், கேரளாவின், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர், தவறுதலாக, தமிழகத்தை சேர்ந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறையில் உள்ள, 33 பேரின் சரியான முகவரியை தருமாறு, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகம் மற்றும் கேரள அரசுகளை கேட்டு கொண்டது.கேரளா மட்டும், தன் மாநிலத்தை சேர்ந்த, ஆறு பேரின் முகவரியை மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், தமிழக அரசு, தமிழகத்தை சேர்ந்த, 27 பேரின் முகவரியை, தமிழகம் இன்னும் அனுப்பவில்லை, என கூறப்படுகிறது.

இதனால், மொத்தமுள்ள, 33 பேரையும், கொழும்பு சிறையில் இருந்து, இந்தியா கொண்டு வர தாமதம் ஏற்பட்டுள்ளது.கால தாமதத்தை தவிர்க்க, தங்கள் மாநிலத்தை சேர்ந்த, ஆறு பேரை மட்டும் சிறையில் இருந்து விடுவித்து கொண்டு வர, மத்திய அரசை கேரளா வலியுறுத்தி வருகிறது.

No comments:

Post a Comment