Monday, February 11, 2013
இலங்கை::அரசாங்கம் அபிவிருத்திப்பணிகளில் படையினரை ஈடுபடுத்த எடுத்த தீர்மானமானது மிகவும் பயனுள்ளது என சர்வதேச கண்கானிப்புக்கான மூத்த அமைச்சரும், வர்த்தக மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் கடந்த ஆண்டு அபிவிருத்திப்பணிகளில் இராணுவத்தினரைப் பயண்படுத்தியதால் அரசால் 1,500 மில்லி யன் ரூபாவை சேமிக்கக்கூடியதாகவிருந்தது. தேசிய அபிவிருத்தியில் இவ்வாறான சாதகமான விளைவை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிறந்த வழிகாட்டளுக்கு அமைவாகவே பெறக்கூடியதாகவுள்ளது,
பொதுவாக யுத்தம் முடிவடைந்தவுடன் படைக்களைப்பு செய்து இராணுவத்தினரை சமூகத்துடன் இணைப்பதே வழமையாகும், எனினும் யுத்தத்தில் போராடிய படையினரை திடீரென வீடுகளுக்கு அனுப்பு வேண்டும் என எவரும் எதிர்பார்க்க முடியாது.
தற்போது மூன்று தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது,அரசாங்கம் சாதுர்யமாக படையினரை அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது,என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment