Monday, February 4, 2013

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இந்திய பிரஜை கைது!

Monday, February 04, 2013
இலங்கை::சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை எடுத்துச் செல்ல முயற்சித்த இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் துபாயை நோக்கி புறப்படுவதற்கு தயாராகியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவின் பணிப்பாளர் வெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரஜையின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 34 இலட்சம் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஏற்கனவே இரண்டு தடவைகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் தொடர்ந்து சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுங்கப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment