Monday, February 4, 2013

தேரர் வெட்டி‍க் கொலை; சந்தேகநபர்களும் துப்பாக்கி சூட்டில் பலி!

Monday, February 04, 2013
இலங்கை::மொரட்டுவ எகொடை உயன பகுதியில் விஹாராதிபதி தேரர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் இரண்டு சந்தேகநபர்களும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு 9.15 அளவில் மொரட்டுவ எகொட உயன சுனந்தோ பனந்த விஹாரையின் விஹாராதிபதி மெட்டிகஹ தென்னே விமலவங்ச தேரர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார்.

காணி தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான சுஜித் குணரத்ன மற்றும் ரன்திம ருவன்ரத்ன இருவரும் துப்பாக்கிச் சூட்டு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்கிஸ்ஸ குற்றத் தடுப்புப் பிரிவினர் மொரட்டுவை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment