Wednesday, February 06, 2013
இலங்கை::புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பணம் மற்றும் ஆபரணங்களுக்கு என்னவாயிற்று என ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது.
பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் நோக்கில் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்னதாக புலிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் அரசாங்கம் புலிகளின் சொத்துக்களை பெற்றுக் கொண்டது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை.
குமரன் பத்மநாதனின் கோடிக்கணக்கான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment