Wednesday, February 6, 2013

பயங்கரவாதிகளுக்கு அல்லது பயங்கரவாத அமைப்பிற்கு பணம் அல்லது பொருள் உதவிகள் வழங்குவதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் இன்று நாடாளுமன்றில் அமுல்படுத்தப்பட உள்ளது!

Wednesday, February 06, 2013
இலங்கை::பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுக்கும் நோக்கில் நாடாளுமன்றில் விசேட சட்ட மூலமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு அல்லது பயங்கரவாத அமைப்பிற்கு பணம் அல்லது பொருள் உதவிகள் வழங்குவதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பான உத்தேச பிரேரணை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்களுக்கு அல்லது பயங்கரவாதிகளுக்கு நிதி உதவிகளை வழங்குவோர் பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டுமென சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment