Wednesday, February 6, 2013

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை நோக்கி நகருமாறு தமது நாடு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புக்களை வலியுறுத்தும் - அலிஸ்டயர் பேர்ட்!

Wednesday, February 06, 2013
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை நோக்கி நகருமாறு தமது நாடு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புக்களை வலியுறுத்தும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைப்பின் தெற்காசியத்துறை அமைச்சர் அலிஸ்டயர் பேர்ட் இதனை கருத்தை வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் சமூக இணையத்தளம் மூலம் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியமானது. அத்துடன் அவர்கள் முன்னோக்கி செல்ல அது அவசியமானது என்றும் அலிஸ்டயர் பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தமது நாடு இன்னும் தீhமானிக்கவில்லை.

இதேவேளை யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியோருக்கான வசதிகள் திருப்தி தரவில்லை.

இந்தநிலையில் இலங்கையில் மனித உரிமை காப்பாளர்களுக்கு பேச்சு உரிமைமையை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் அலிஸ்டயர் கேட்டுள்ளார்...

இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களது நாட்டுக்கு வழமையாக திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை  பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் மறுத்துள்ளார்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் அவர்கள், இது குறித்து ஒவ்வொரு விடயமாக ஆராயப்பட்டதாகவும், அச்சங்கள் இருக்கும் பட்சத்தில் அவை குறித்து நீதிமன்றங்களுக்கு அரசாங்கம் அறிவித்து வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment