Wednesday, February 6, 2013

கடற்பரப்பில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பில் அவர்களின் நாடுகளுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

Wednesday, February 06, 2013
இலங்கை::கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பில் அவர்களின் நாடுகளுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் தொடர்பில் குறித்த நாடுகளின் இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொது தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரொட்னி பெரேரா குறிப்பிட்டார்.

கிழக்குக் கடற்பரப்பில் அண்மையில் விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த வெளிநாட்டவர்கள் 137 பேர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment