Sunday, February 03, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் கொண்டுவரப்படவுள்ள யோசனை, நாட்டின் எதிர்காலத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகள் இலங்கை விடயத்தில் இவ்வாறு செயற்படுவது பொறுத்தமான விடயம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் முன்னேற்ற பாதைக்கு வரும் இலங்கைக்கு பாதிப்பாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு லக்மன் கதிர்காமர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment