Sunday, February 03, 2013
இலங்கை::ஜெனிவாவில் மனித உரிமை பேரவை அமர்வின் போது இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் எண்ணத்தை அமெரிக்கா கொண்டுள்ளதுபற்றி முறைசார் அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனிதஉரிமை பேரவையின் அமர்வின்போது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தால் அரசாங்கம் அதனை உறுதியாக எதிர்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கே.அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஒரு குறுகிய காலத்தில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளோம் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.
இலங்கை நிலைமைபற்றி மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ள நாடுகளிலிருந்து வரப்போகும் சவால்களை இலங்கை அணி தெரிந்து வைத்துள்ளது.
இலங்கைப்பற்றி பிழையான எண்ணங்களை ஆதாரங்களாலும் புள்ளிவிபரங்களிலும் முறியடிப்பதற்கு இலங்கை தயாராகிவிட்டது என்றும் அவர் சொன்னார்

No comments:
Post a Comment