Monday, February 4, 2013

சீன நாடாளுமன்ற உறுப்பினராக நடிகர் ஜாக்கிசான் தேர்வு!!

Monday, February 04, 2013
இலங்கை::பீஜிங்::சீன நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக நடிகர் ஜாக்கிசான் மற்றும் நோபல் பரிசு பெற்ற மோ யான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆட்சி தலைவர்கள் சமீபத்தில் மாற்றப்பட்டனர். அதன்படி, கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வருகிறது.

சீனாவின் புதிய அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, முறைப்படி இவர் பதவியேற்பார். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக நடிகர் ஜாக்கிசான் மற்றும் 2012ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற மோ யான் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 2,237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியில் அதிகாரமிக்க இந்த பதவியில் இதுவரை 399 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment