Tuesday, February 05, 2013
இலங்கை சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் பயணங்களை தடுக்க உதவிகள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
படகு மூலம் இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் புறப்படுவதனை தடுக்க சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கான முக்கிய காரணங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் புகலிடக் கோரிக்கை அல்லவென அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் குடிவரவு தொடர்பான நிழல் அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார இலாபம் மற்றும் சுகபோக வாழ்க்கை போன்ற காரணங்களுக்காகவே இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருகைத் தருவதாக கன்பராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி எதிர்க்கட்சி தலைவர் ஜூலி பிஷொப் உள்ளிட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தமது கட்சி உட்பட நட்புறவு கட்சிகளுடன் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் அவர்கள் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment