Tuesday, February 05, 2013
இலங்கை:::பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுப்பது தொடர்பான சட்டமூலம் நாளை பாராளு மன்றத்தில் நிறைவேற் றப்பட உள்ளது.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம் இந்த சட்டமூலம் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுப்பது மீதான சமவாய திருத்த சட்டமூலம் மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது. இந்த சட்டமூலத்தின் பிரகாரம் ஐ. நா. வினால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
சட்டவிரோதமாகவோ விருப்பத்தின் பேரிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதும் நபர் பயங்கரவாத அமைப்பொன்றிற்கு பொருளாதார ரீதியில் உதவுவது இந்த சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாத அமைப்புசார் பட்டியலில் எல். ரி. ரி. ஈ., அல்- குவைதா, தலிபான் அடங்கலான பல அமைப்புகள் உள்ளதோடு, அவற்றின் பட்டியல் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட உள்ளன.

No comments:
Post a Comment