Tuesday, February 5, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை - ஹிந்து முன்னணியின் தலைவர் ராமா கோபாலன்!

Tuesday, February 05, 2013
சென்னை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என ஹிந்து முன்னணியின் தலைவர் ராமா கோபாலன் தெரிவித்துள்ளார்.

ஹிந்து முன்னணியானது இந்து மக்களின் உரிமைகளுக்காக தமிழ் நாட்டில் இருந்து செயற்படும் அமைப்பாக திகழ்கிறது.

ஏற்கனவே அந்த அமைப்பினர் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிராக தமிழ் நாட்டில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஹிந்து முன்னணியின் தலைவர் ராமா கோபாலன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திருப்பதி தலத்திற்கு சமய நிகழ்விற்காகவே வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கையிலிருந்த கத்தோலிக்க யாத்திரிகர்கள் சிலர் வேளாங்கன்னி தேவாலயத்திற்கு சென்ற போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அந்த சம்பவம் இந்திய அரசியல் தரப்பினரால் கடும் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இதன்காரணமாக இலங்கை அரச தலைவரின் தமிழக விஜயத்திற்கு எந்த இடையூறுகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என ஹிந்து முன்னணியின் தலைவர் ராமா கோபாலன் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment