Tuesday, February 5, 2013

இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது - (கரடி புலி) கருணாநிதி!

Tuesday, February 05, 2013
சென்னை::டெசோ உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. திமுக தலைவர் (கரடி புலி) கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டா லின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்ற குழு தலை வர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தபின் கருணாநிதி அளித்த பேட்டி:

நீங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் ராஜபக்ஷே இங்கே வந்து செல்கிறாரே?

இதற்கு மேல் என்ன செய்யலாம் சொல்லுங்கள். 1980ல் டெசோ சார்பில் தொடர் போராட்டம் நடந்தது. அதனால் நாடு கடத்தும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இப்போது அது போல இல்லையே?

இந்த நிலை நீடித்தால், அந்த போராட்டங்கள் நிச்சயம் திரும்பும்.

இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி தொடரும் என்று ஏ.கே.அந்தோணி கூறுகிறாரே?

அதை நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் ஏற்கப்படாமல், தொடர்ந்து தயக்கம் காட்டப்படுமேயானால், டெசோ சார்பில் தொடர் போராட்டங்கள் நிச்சயம் நடத்தப்படும்.

8ம் தேதி போராட்டத்திற்கு யார் தலைமை தாங்குவார்?

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் தலைமை தாங்குவர்.

டெல்லியில் போராட்டம் நடத்துவீர்களா?

கருத்தரங்கம் நடத்துவோம்.

ராஜபக்சே இந்தியா வருவதால், மற்ற நாடுகள் ஐ.நா.தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கும் நிலை வருமா?

அது உங்கள் யூகம். அந்த சூழ்நிலை உருவாகக்கூடாது.

நீங்கள் எதிர்க்கிறீர்கள். ஆனால் ராஜபக்சேக்கு மத்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. இது உங்களுக்கு எந்த அளவு வருத்தம் அளிக்கிறது?

நாங்கள் கருப்பு கம்பளம் விரிக்க போகிறோமே, அந்த அளவுக்கு.

டெல்லியில் டெசோ உறுப்பினர்கள் சந்தித்த வெளிநாட்டு தூதர்களின் கருத்து என்ன?

நேரம் போதாததால் 6 நாட்டு தூதர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. மற்ற நாட்டு தூதர்களை பகுதி பகுதியாக பிரிந்து சென்று சந்திப்பார்கள்.

வீரமணி: ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தவர்கள், எதிராக வாக்களித்தவர்கள், நடுநிலையாளர்கள் என்று 3 பகுதியாக பிரித்து சந்தித்தோம். மீண்டும் தீர்மானம் வரும் போது, ஆதரவு தாருங்கள் என்று வலியுறுத்தினோம்.

டெசோ தீர்மானத்தில் தனி ஈழம் கோரிக்கை இல்லையே?

இலங்கை தமிழர்களி டம் ஐ.நா மன்றம் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அது தெற்காசிய மனித உரிமை பிரச்னையாக முன்னிலை படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

ஈழ தமிழர் அவலங்களுக்கு தீர்வு தனி ஈழம்தான் என்று டெசோ கருதுகிறதா?

கருதுகிறது கருதுகிறது கருதுகிறது.

மீதமுள்ள 44 நாட்டு தூதர்களை எப்போது சந்திப்பீர்கள்?

பாலு, திருமாவளவன், அப்துல் ரகுமான் ஒரு குழுவாகவும், கனிமொரூ., தங்கவேல், ராமலிங்கம் ஒரு குழுவாகவும், இளங்கோவன், வேணுகோபால், சுகவனம் ஒரு குழுவாகவும், திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஒரு குழுவாகவும், தயாநிதி மாறன், விஜயன், ஜெயதுரை ஒரு குழுவாகவும், ராசா, ரித்தீஷ், ஹெலன் ஒரு குழுவாகவும், செல்வகணபதி, ஆதிசங்கர், தாமரை செல்வன் ஒரு குழுவாகவும் சென்று சந்திப்பார்கள்.

இதுவரை நடந்த உங்கள் முயற்சிக்கு மத்திய அரசின் நிலை என்ன?

பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என் கடிதத்திற்கு சோனியா பதில் அனுப்பியுள்ளார். ‘இலங்கை தமிழர்களின் இன்னல்கள் குறித்த உங்கள் கவலையில் நானும் பங்கு கொள்கிறேன். இந்த பிரச்னையை வெளியுறவு அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்’ என்று எழுதியிருக்கிறார். 89 ஊர்களின் தமிழ் பெயர் மாற்றப்பட்டதை பட்டியலாக இணைத்திருந்தேன்.

இந்த கோரிக்கைக ளுக்கு வலு சேர்க்க முக்கிய கட்சிகளை வலியுறுத்துவீர்களா?

அதற்காகதான் டெல்லியில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் உள்ள எல்லா கட்சிகளும் அழைக்கப்படும்.

பா.ஜ.வை அழைப்பீர்களா?

பிரச்னையில் அக்கறை உள்ள எல்லா கட்சிகளையும் அழைப்போம். இதற்கு முன் மதுரையில் நடந்த டெசோ மாநாட்டிற்கு வாஜ்பாய் வந்திருந்தார்.

இவ்வாறு (கரடி புலி) கருணாநிதி பதில் அளித்தார்.

No comments:

Post a Comment