Thursday, February 7, 2013

அவுஸ்திரேலிய பாராளுமன்ற எதிர்க்கட்சி பிரதித்தலைவரின் தலைமயிலான பாராளுமன்ற குழு தமது வடக்குக்கான விஜயம் தொடர்பாகவும் யுத்தத்தின் பின்னரான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளனர்!

Thursday, February 07, 2013
இலங்கை::கடந்த ஜனவரி இறுதிப்பகுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய பாராளுமன்ற எதிர்க்கட்சி பிரதித்தலைவரின் தலைமயிலான பாராளுமன்ற குழு தமது வடக்குக்கான விஜயம் தொடர்பாகவும் யுத்தத்தின் பின்னரான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளனர்.

இக்குழு அவுஸ்திரேலிய பாராளுமன்ற குடிவரவு நிழல் அமைச்சர் ஸ்கொட் மொரிசன் மற்றும் எல்லைப்பாதுகாப்பு பேச்சாளர் மைக்கல் கீனன் ஆகியோருடன் இணைந்து வடக்கு,கிழக்கு பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டதுடன் இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் இங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி உருப்பினர்களுடனும் கலந்துரையாடினர். இதில் சட்டவிரோதமாக மக்கள் கடத்தப்படுவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

பின்னர் இக்குழு நாட்டுக்கு திரும்பியவுடன் பிஷப் கூறினார், இலங்கைக்கான விஜயத்தின்போது அங்கு யுத்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதாகவும் முன்னெடுத்துச்செல்லப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்த்து தான் பிரமித்ததாகவும் பல பில்லியன் ரூபாய் பெருமதியான உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் இடம்பெறுவதாகவும் கூறினார். அவர் மேலும் கூறும்போது இலங்கை அரசினது கொள்கைத்திட்டம் முற்றிலும் சரியானதும் வரவேற்கத் தக்கதாகவுமுள்ளது என்றும் கூறினார்.

அவர் தொடர்ந்து விபரிக்கையில் அங்கு இடம்பெறும் புனர்வாழ்வு புனரமைப்பு, மீள்குடியேற்றம் நல்லினக்கத்தை நோக்கியதாயுள்ளதாக் குறிப்பிட்டார்.

பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தின்போது ஏனைய நாடுகளுக்கும் இலங்கையைச்சென்று பார்வையிடும்படி கூறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக மக்கள் நாட்டைவிட்டு பல துன்ப துயரங்களை அனுபவித்து வெளிநாடுகளுக் செல்லக்கூடிய அளவுக்கு நாட்டில் எதுவித அச்சுறுத்தலோ அடக்குமுறையோ இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment