Thursday, February 07, 2013
இலங்கை::சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமேன தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் விசாரணைகளின் மீது நம்பிக்கைக் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியான விசாரணைகளின் மூலம் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களுக்கு வலிகோலும் என அவர் தெரிவித்துள்ளார்.குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, சிங்கள ஊடகங்கள் அரசாங்கத்தின் குற்றங்களை வெளிப்படுத்துவதில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.இந்த நிலைமையானது மிகவும் ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கினை சிங்கள ஊடகங்கள் உரிய முறையில் வெளிப்படுத்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் சகல இன மக்களும் எதிர்க்கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment