Thursday, February 07, 2013
புதுடெல்லி::இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் திட்டமில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. புகலிடம் கோரி தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு பலவந்தப்படுத்தப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளது,
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களை பார்வையிட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது எனவும், இது தொடர்பில் தமிழக அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் சில ஊடகஙக்ளில் தகவல் வெளியாகியுள்ளன.
எனினும், இவ்வாறான கோரிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு காலங்களில் இலங்கையர்கள் இந்தியாவில் புகலிடம் கோரியுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment