Thursday, February 07, 2013
மெக்சிகோ::மெக்சிகோவில் 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ளது குவாடலாஜரா நகர். இங்கு வசிக்கும் ஒரு 9 வயது சிறுமிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஜலிஸ்கோ போலீஸ் செய்தித் தொடர்பாளர் லினோ கோன்சலீஸ் கூறியதாவது: சிறுமியும் பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவனும் நெருங்கி பழகி உள்ளனர். அதில் சிறுமி கருவுற்று இருக்கிறாள். விசாரித்த போது, எனது பாய் பிரண்ட் என்று சிறுமி குறிப்பிட்டாள். சிறுமி கருவுற்ற பிறகு அவனை காணவில்லை. சிறுமியும் அவள் பெற்றெடுத்த பெண் குழந்தையும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர். சிறுவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், குழந்தைகள் பலாத்கார குற்றத்தின் கீழ் அவனுக்கு தண்டனை வழங்கப்படும். இவ்வாறு லினோ கூறினார்.


No comments:
Post a Comment