Thursday, February 7, 2013

சுற்றுலா விசாவில் மாந்திரீக நடவடிக்கை; இந்திய பிரஜைகள் இருவர் கைது!

Thursday, February 07, 2013
இலங்கை::சுற்றுலா விசாவில் இலங்கை வந்து மாந்திரீக நடவடிக்கைகள் மூலம் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் இரண்டு இந்திய பிரஜைகள் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் மாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, விசா அனுமதியின்றி கண்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நெதர்லாந்து பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment