Thursday, February 7, 2013

திருச்சி திருமணத்தில் குஷ்புவைத் தாக்கிய திமுகவினர்.. விமான நிலையத்தில் செருப்பு வீச்சு!!

Thursday, February 07, 2013
திருச்சி,திருச்சியில் நடிகை குஷ்பு மீது தி.மு.க. தொண்டர்கள் செருப்பை வீசி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு அனுப்பி வைத்தனர்.

நடிகை குஷ்பு

தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டமும், திருச்சி சிவா எம்.பி.யின் இல்ல திருமண விழாவும் திருச்சியில் இன்று நடந்தது. இந்த விழாக்களில் கலந்து கொள்ள நடிகை குஷ்பு நேற்று சென்னையில் இருந்து திருச்சி வந்தார். நேற்று காலை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அங்கிருந்து காரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கி இருந்த சங்கம் ஓட்டலுக்கு சென்றார்.

அங்கு நடிகை குஷ்பு, மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச முயற்சித்தார். பின்னர் திடீரென்று அங்கிருந்து இருந்து புறப்பட்டு, திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அவர் தங்கி இருந்த பெமினா ஓட்டலுக்கு சென்றார். அங்கு பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஓட்டலுக்குள் நுழைய சில அடி தூரம் நடந்து சென்றார். அப்போது அங்கு சுமார் 30 பேர் கொண்ட கும்பல் குஷ்புவை நோக்கி ஆவேசமாக வந்தனர்.

தி.மு.க.வினர் திடீர் தாக்குதல்

அவர்கள் திடீரென்று குஷ்பு மீது செருப்பை வீசி தாக்கினார்கள். பின்னர் தங்கள் கைகளில் வைத்து இருந்த ஒரு வாரப்பத்திரிக்கையை கிழித்து குஷ்பு முகத்தில் வீசினார்கள். இதனால் குஷ்பு அதிர்ச்சி அடைந்தார். அவர்களுடன் பேச முயன்றார். ஆனால் அதனை ஏற்காமல் அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டனர். உடனே சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் மற்றும் குஷ்புவின் உதவியாளர்கள் ஓடி வந்தனர்.

அவர்கள் குஷ்பு மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது குஷ்புவின் உதவியாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. இதையடுத்து குஷ்புவை ஓட்டல் மேலாளர் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டு ஓட்டலுக்குள் அழைத்து சென்றனர். இது பற்றி அறிந்த பத்திரிக்கையாளர்களும் பெமினா ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் யாரையும் ஓட்டலுக்குள் அனுமதிக்கவில்லை.

போலீசார் விரைந்தனர்...

உடனடியாக இச்சம்பவம் பற்றி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்டோன்மெண்ட் போலீசார் ஓட்டலுக்கு விரைந்தனர். இதற்கிடையே குஷ்பு மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. தொண்டர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து ஓட்டலுக்கு வந்த போலீசார் குஷ்புவை பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவரை காரில் பத்திரமாக விமான நிலையம் அனுப்பி வைத்தனர். அவர் அங்கிருந்து மாலை 3 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

நடிகை குஷ்பு சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அதில் மு.க.ஸ்டாலின் பற்றி அவர் கூறியிருந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே தி.மு.க. தொண்டர்கள் குஷ்பு மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

குஷ்பு பேட்டி

சென்னைக்கு பிறப்படுவதற்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:–

கட்சியில் சேர்ந்த நாள் முதல் நான் தலைமை வழியில்தான் சென்று வருகிறேன். இதைக்கூட அந்த வார பத்திரிக்கையில் சொல்லி இருக்கிறேன். என் வீட்டில் கலைஞர், ஸ்டாலின் படம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தொண்டர்கள் இவ்வாறு நடந்து கொண்டது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. என் வீடு தாக்கப்பட்டதால் எனது குழந்தைகள் பயத்துடன் உள்ளனர். இதுகுறித்து நான் தலைமையிடம் புகார் தெரிவித்து உள்ளேன்.

மேலும் திருச்சியில் நான் காரில் ஏற முயன்றபோது என் மீதும் தாக்குதல் நடந்தது. இதுகுறித்தும் தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளேன். தலைமை விசாரணை நடத்தி வருவதால் விசாரணை நடைபெற்று முடிந்தவுடன் இதுகுறித்து பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டமும்–நடையுமாக

திருச்சி விமான நிலையத்திற்கு நடிகை குஷ்பு வருவதாக தகவல் கிடைத்ததும் மாநில மகளிர் அணி துணை செயலாளர் புதுக்கோட்டை விஜயா தலைமையில் தி.மு.க.வினர் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் குஷ்புவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டபடி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.

இதுபற்றிய தகவல் தெரிந்த போலீசார் நடிகை குஷ்புவை உஷார்படுத்தினார்கள். இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய குஷ்பு ஓட்டமும், நடையுமாக விமான நிலையத்திற்கு உள்ளே சென்றார். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:–

கஷ்டமாக உள்ளது

கட்சியில் சேர்ந்த நாள் முதல் நான் தலைமை வழியில்தான் சென்று வருகிறேன். இதைக்கூட அந்த வார பத்திரிக்கையில் சொல்லி இருக்கிறேன். என் வீட்டில் கலைஞர், ஸ்டாலின் படம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தொண்டர்கள் இவ்வாறு நடந்து கொண்டது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. என் வீடு தாக்கப்பட்டதால் எனது குழந்தைகள் பயத்துடன் உள்ளனர். இதுகுறித்து நான் தலைமையிடம் புகார் தெரிவித்து உள்ளேன்.

மேலும் திருச்சியில் நான் காரில் ஏற முயன்றபோது என் மீதும் தாக்குதல் நடந்தது. இதுகுறித்தும் தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளேன். தலைமை விசாரணை நடத்தி வருவதால் விசாரணை நடைபெற்று முடிந்தவுடன் இதுகுறித்து பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment