Thursday, February 7, 2013

இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல்!

Thursday, February 07, 2013
சென்னை::இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வியாழக்கிழமை இன்று வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவ, மாணவியர்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக வந்து சிதம்பரம் காந்திசிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ராபட்சவிற்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் ஏஎஸ்பி எம்.துரை தலைமையிலான போலீஸார் அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment