Monday, February 04, 2013
இலங்கை::கல்விச் சமூகங்களை உருவாக்குவதன் மூலம் நமது எதிர்கால சமூகங்களை பலமுள்ளதாக ஆக்குவதுடன், எமது பிள்ளைகள் கடந்த கால கொடுமைகள் தெரியாதவர்களாகவும் வளர்த்தாக வேண்டும் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.
text-align: justify;">
மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போதே மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில், மட்டக்களப்பு பிரிக்கேட் கட்டளைத் தளபதி கேணல் திலக், மட்டக்களப்பு விமானப்படை விங் கொமாண்டர் எயார் மாசல் அஜித் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரனால், தேசியக் கொடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட மாவட்ட செயலகத்தில் இலங்கையின் 65வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, உதவி மாவட்டச் செயலாளர் வி.வாசுதேவன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்,
நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பல துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். மட்டக்களப்பு பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களும், சுதந்திரப் போராட்ட காலத்தில் வீரர்களாக இருந்து பலரை கழுமரத்திலும் ஏற்றியுள்ளனர்.
ஒரு குழந்தை சுதந்திரமாகப் பிறந்து, சுதந்திரமாக வளர்ந்து, சுதந்திரமாக இறக்க வேண்டும். இந்நிலைக்கு மாறாக பல உரிமை மீறல்களைச் செய்பவர்களாக மனித உரிமை மீறல்களில் ஏற்படுத்துபவர்களாகவும் இருக்கிறோம்.
ஜனாதிபதி பெருந்தொகைப் பணத்தினை நமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கியிருந்தார். எதிர்காலத்திலும் ஒதுக்கியிருக்கிறார். இன்னும் இன்னும் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கிவருகிறார். அதனைத் பயன்படுத்திக் கொள்பவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
நமது மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து வாழ்கிறோம். அதேநேரம் அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு நாகரீகமான அரசியலை நடத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அரச அதிகாரிகள் அரசாங்கத்தை அனுசரித்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் அதிதிகளால் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment