Monday, February 4, 2013

சுதந்திர தினமான இன்றையதினம் நாட்டின் அமைதியையும். சுபீட்சத்தையும் வேண்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திருகோணமலையில் அமைந்துள்ள கோணேஸ்வரர் ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடு!

Monday, February 04, 2013
இலங்கை::சுதந்திர தினமான இன்றையதினம் (04) நாட்டின் அமைதியையும். சுபீட்சத்தையும் வேண்டி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திருகோணமலையில் அமைந்துள்ள கோணேஸ்வரர் ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

சுதந்திர நிகழ்வுகளுக்காக திருகோணமலைக்குச் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், கோணேஸ்வரர் ஆலயத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஆலயத்தின் பிரதம குருவான சண்முகரட்னகுருக்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விசேட பூசை வழிபாடுகளில் அமைச்சர் அவர்களுடன், ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, ஈ.பி.டி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா, ஈ.பி.டி.பியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே கோவில் நிர்வாகத்தினர் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த அதேவேளை, ஜனாதிபதியின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இச் சிறப்புப் பூசை வழிபாட்டின் போது ஆலயத்தின் பிரதம குருக்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் நிறைவில் ஆலயப் பதிவேட்டில் புத்தகத்திலும் அமைச்சர் அவர்கள் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment