Friday, February 01, 2013
சென்னை::தமிழக சட்டசபையின் இந்தாண்டிற்கான முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் இன்று (1.2.2013)துவங்கியது.
10.02 மணிக்கு கவர்னர் ரோசய்யா உரையை வாசிக்கத் தொடங் கினார்.
அப்போது அவர், ‘’இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ் மக்களை சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும்.
சிங்களவருக்கு இணையாக சம உரிமை கிடைக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். சொந்த நாட்டில் சுயமரியாதையோடு இலங்ஐ தமிழர் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தமிழக அரசு வலியுறுத்துவதாக சட்டசபையில் ஆற்றிய உரையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார் வலியுறுத்தினார்....
தமிழக சட்டப்பேரவை நடப்பாண்டின் முதல் கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் ரோசய்யா உரையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* அமைச்சர் குழு அளித்த பரிந்துரையின்படி விரைவில் விவசாயிகளுக்கு நிவாரணம்
* இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
* அரசின் அனைத்து பணிகளும் கணினி மயமாக்கப்படும்.
* மின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* வறுமை ஒழிப்பில் முன்னுதாரமாக தமிழகம் விளங்குகிறது.
* எண்ணூர் மின்திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்.
* சூரிய சக்தி மூலம் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி தயாரிக்க இலக்கு நிர்ணயம்.
* 11 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
* டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
* ஆதார் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
* இலவச அரிசி திட்டத்திற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.4,900 கோடி மானியம் வழங்கி வருகிறது.
* கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* அந்நிய முதலீட்டை ஈர்ப்பத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
* பெண் குழந்தை பிறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
* தமிழக அரசின் நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
* நலிந்த பிரிவினருக்கு சிறப்பு மருத்துவ வசதி செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.
* நகர்ப்புற மேம்பாட்டிற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
* குடிசை மாற்றுவாரியம் மூலம் 7 மாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* வறுமை ஒழிப்பிற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
* 'விஷன் 2023' திட்டத்தில் 2 கோடி இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி.
* கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
* விஷன் 2023 இரண்டு வெளியிடப்படும்
* நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது.
* நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும்.
* தமிழகத்தில் நில அபகரிப்பு முழுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
* இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
* காவிரியிலிருந்து நீர் திறக்காததால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் அளிக்கும்.
* நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைய அரசு நடவடிக்கை
* முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குவிக்கிற்கு அரசு மணி மண்டபம் அமைத்தது.
* சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருந்த டேம் 999 திரைப்படம் தடை செய்யப்பட்டது.
* தமிழக அரசின் தைரியமான நடவடிக்கைகளை பாராட்டுகிறேன்.
* தீயணைப்பு துறையில் பணியாளர்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை
* காவல்துறைக்கு பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment