Friday, February 01, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வருகின்றன.
இந்தத் தீர்மானத்தின் போது இந்தியா, இலங்கைக்கு சாதகமான முறையில் நடந்து கொள்ளுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அண்டை மற்றும் நட்பு நாடு என்ற ரீதியில் மனித உரிமை விவகாரங்களின் போது இந்தியா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த தடவை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த போதிலும், அந்த விடயங்கள் குறித்து ராஜதந்திர ரீதியில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.காலத்துக்கு காலம் நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற போதிலும், நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியா, இலங்கைக்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என அவா தெரிவித்துள்ளார்.குறிப்பாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment