Friday, February 1, 2013

சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு: இலங்கையின் சில துறைமுகங்களில் நெதர்லாந்து பாதுகாப்பு படைப்பிரிவினர் செயற்பட அனுமதி!

Friday, February 01, 2013
இலங்கை::நெதர்லாந்து, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பினை வழங்க தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள நெதர்லாந்து தூதுவராலயத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில், இலங்கையின் சில துறைமுகங்களில் நெதர்லாந்து பாதுகாப்பு படைப்பிரிவினர் செயற்பட அனுமதிக்கப்படுவர்.

இதேவேளை, நேற்று முன்தினம் நெதர்லாந்து பாதுகாப்பு கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு ஒரு குழுவினர் கொண்டு வந்து நங்கூரமிட்டுள்ளனர்.

இதேவேளை, இங்கிருந்து செயற்படும் நெதர்லாந்து பாதுகாப்பு கப்பல், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்படும் என தூதுவராலயத்தினால் விடுக்கப்பட்டள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment